ஞாயிறு, 30 நவம்பர், 2008

வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி

மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் தேச ஒற்றுமையை காக்க, தேச மக்களை காக்க போராடி வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரிகள், வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும், யுத்தத்தில் பயங்கரவாதிகளைக் கொன்று நாட்டு மக்களுக்கு அமைதி பெற்றுத் தந்த ராணுவம், மற்றும் தேசிய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு நமது வாழ்த்தை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.

















மும்பை சம்பவத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி
















மும்பை மாநகரில் கடந்த 62 மணிநேர யுத்தத்திற்கு பின் நமது ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் எஞ்சியிருந்த பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று மும்பைபை சகஜ நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 183 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தில் பயங்கரவாதிகளைக் கொன்று நாட்டு மக்களுக்கு அமைதி பெற்றுத் தந்த ராணுவம், மற்றும் தேசிய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு நமது வாழ்த்தை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.

புதன், 19 நவம்பர், 2008

நடிகர் எம்.என்.நம்பியார் மரணம்

பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.


நம்பியார் மரணம் அடைந்த தகவல், சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் விரைந்து வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"பழம்பெரும் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும், தீவிர ஐயப்ப பக்தருமான எம்.என்.நம்பியார் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
ஏராளமான திரைப்படங்களில் நான் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். எல்லோரிடமும் மிகுந்த கலகலப்புடனும், நகைச்சுவை பாங்குடனும் பேசக்கூடியவர். நம்பியாருடன் படிப்பிடிப்பு என்றாலே வேலைப்பளுவும் தெரியாது. பொழுது போவதும் தெரியாது. நம்பியார் என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
நம்பியாரின் இழப்பு திரைப்படத்துறையினருக்கு மட்டுமல்லாமல் ஆன்மீக வாதிகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.''
இவ்வாறு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.




அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், போலீஸ் டி.ஜி.பி.(பயிற்சி) விஜயகுமார் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

புகைபடத்தில் கவிதைகள்.



நான் மிகவும் ரசித்த கவிதைகள் இந்த புகைபடங்களில் உள்ளது.

வெள்ளி, 14 நவம்பர், 2008

கவிதைகளில் புகைப்படங்கள்







நான் விரும்பிய, மிகவும் ரசித்த, கவிதைகளில் புகைப்படங்கள் இவை.

புதன், 12 நவம்பர், 2008

Anton Joel Kennedy

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


( D.O.B- 13.11.2007 )
தந்தை: A.George Kennedy
தாய்: Jaquline Kennedy
இன்று பிறந்த நாள் காணும் "அன்டன் ஜோஎல் கென்னடி"கு,
பிறந்த நாள் வாழ்த்துகள்.
அன்புடன்,
யுகநேசன்

செவ்வாய், 11 நவம்பர், 2008