சனி, 24 ஜனவரி, 2009

பிரதமர் விரைவில் குணமடைய வேண்டுமென, நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று பிரார்த்தனை!.






பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இதய அறுவை சிகிச்சை, நேற்று வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. காலை 7.15 மணிக்கு துவங்கிய அறுவை சிகிச்சை, மாலை 4 மணிக்கு முடிந்தது. அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அடுத்த 48 மணி நேரத்திற்கு, டாக்டர்களின் அதிதீவிர கண்காணிப்பில் இருப்பார். பிரதமர் விரைவில் குணமடைய வேண்டுமென, நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று பிரார்த்தனையும் நடந்தது.

செவ்வாய், 20 ஜனவரி, 2009

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா

வாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை. கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.













ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர்.இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதன், 14 ஜனவரி, 2009

செய்தி புகைப்படங்கள். (புதன் ,ஜனவரி,14, 2009)





அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க இருக்கிறார். இதையொட்டி,பேரணியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி ஏற்பு விழாவை காண்பதற்கு டிக்கெட் தேவையில்லை. ஆனால் பேரணி செல்லும் வழியில் இரு பக்கமும் இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். அந்த இருக்கைகளில் உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்ப்பதற்கு டிக்கெட்டுகள் உண்டு. இந்த டிக்கெட்டுகளும் ஒரு ஆளுக்கு 4 தான் விற்கப்படும் என்று வரையறுக்கப்பட்டு உள்ளன.

முதலில் வருபவர்களுக்கு முதலில் டிக்கெட்டு என்று கொடுக்கப்பட்டன. இதன் கட்டணம் 1,250 ரூபாய் ஆகும். டிக்கெட்டு விற்பனை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே அவை விற்று தீர்ந்தன.